History

மட்/மமே/நாற்பதுவட்டை விபுலாநந்தா வித்தியாலயத்தின் வரலாறு

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளைப்பிரதேச செயலகம்பிரிவில் அமைந்துள்ள ஒருபாடசாலையாகக் காணப்படுவது மட்/மமே/நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலையானது தாந்தாமலை 135A  எனும் கிராம சேவகர் பிரிவினை உள்ளடக்கி 237 குடும்பங்களைக் கொண்டு 16.5 சதுர கிலோமீற்றர் பரப்பளவினையூம் 19.4 சதவீத அடர்தியினையூம் கொண்டு அமைந்த கிராமமாகும்.

இப்பாடசாலையினைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் தரம் 1 தொடக்கம் 5 வரையிலான ஆரம்பக்கல்வி வகுப்புக்களையூம் பின்பு தரம் 6 தொடக்கம் 9 வரையிலான இடைநிலைக்கல்வி வகுப்புக்களையூம் பின்னர் தரம் 10 தொடக்கம் 11 வரையான சிரேஸ்ட இடைநிலை வகுப்புக்களையூம் கொண்டு வளர்ச்சி அடைந்ந ஒரு பாடசாலையாகும். இப்படசாலையில் கல்வி கற்பதற்காக மாணவர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் வருகைதருகின்றனர்.அந்தவகையில்இறெட்பானாஇஅலியார்குளம்இவீரக்காடு,நெல்லிக்காடு,மக்களடியூற்று, கச்சக் கொடி சுவாமி மலைஇநாற்பதுவட்டைஇதாந்தாமலை ஆகிய இடங்களிலிருந்து மாணவர்கள் கால் நடையாகவூம் துவிச்சக்கர வண்டிகளிலிருந்தும் வருகை தருகின்றனர்.
 இக்கிராமத்து மக்கள் தங்களின் அன்றாடத் தொழிலாக  விறகு விற்றல், கரி சுடுதல் ,சேனைப்பயிர் செய்தல்,மந்தை மேய்த்தல்,கூலித்தொழில் செய்தல் போன்ற தொழில்களை தம்முடைய குடும்ப வாழ்க்கையினை மேற்கொள்கின்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற மக்களாகக் காணப்படுகின்றனர்.சில குடும்பங்களைப் பொறுத்த வரையில் கூடுதலாக பெண்பிள்ளைகள் காணப்படுவதனால் உழைக்க இயலாத தந்தையூள்ள குடும்பங்களில் சில ஆண் மாணவர்கள் தமது பாடசாலைக் கல்வியினை இடைநடுவில் நிறுத்தி குடும்பப் பொறுப்பை சுமக்கவேண்டியூள்ளமை இக்கிராம மாணவர்களுக்குரிய துர்ப்பாக்கிய நிலையாகும்.இப்பாடசாலையின் ஆரம்ப கால வளர்ச்சிப் பாதையினை புரட்டிப் பார்க்கின்றபோது றெட்பானா குடியேற்றத்திற்கு முன்பு ஆறுமுகம் யோகராசா கிராமத்தின் ஊக்கவிப்பாளராக இருந்தபோது நேசறிப்பாடசாலை ஒன்றினை ஆரம்பித்து நடாத்த வேண்டும் என அதிகாரிகளினால் கூறப்பட்டவேளை நேசறிப்பாடசாலை ஒன்றினை ஆரம்பித்து கற்பகம் என்பவரின் உதவியோடு சர்வோதயத்தின் அனுசரணையூடன் பாலர் பாடசாலையை ஆரம்பித்துநடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் பின்பு 10-10-1986 ஆம் ஆண்டு முன்பள்ளியினையூம் வளந்தோர் கல்வியினையூம் ஆரம்பித்து நடாத்துதல் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் இடம்பெற்று இருந்ததோடு காலையில் முன்பள்ளியூம் பின்நேரம் வளந்தோர் கல்வியூம் இக்கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இவை யாவூம் சிறுவர் பாதுகாப்பு நோர்வே திட்ட நிறுவனத்தின் மூலம் சுனுழு இல் தியாகராசா என்பவர் திட்ட இணைப்பாளராக இருந்து அதனோடு தருமலிங்கம் போன்றௌரும்  உதவியாக அமைந்து செயற்பட்டு இக் கல்வியினை முன்னெடுத்துச் சென்றதோடு இவை யாவற்றுக்கும் மேலாக றெட்பானா குடியேற்றத்திட்டத்தில் மார்ட்டின் எனும் பெரியவரே இவ் அமைப்பினை சிறந்தமுறையில் வழிநடாத்தி சென்ற ஒரு பெரியவராகக் காணப்படுகின்றார். இந்த அடிப்படையில் இக்கிராமத்திற்கான ஆரம்ப அத்திவாரக் கல்விக்கு றெட்பானா அமைப்பினரே வித்திட்டுள்ளனர் என்பதனை யாவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.மேலும்  முன் பள்ளியினையூம் வளந்தோர் கல்வியினையூம் தம்பிமுத்து பிள்ளையம்மா அவர்களே மாணவர்களை வழிப்படுத்தி கற்பித்து வந்துள்ளார்.என்பதோடு மட்டுமன்றி மாணவர்களின் வீட்டு சூழலுக்கும் சென்று மாணவர்களுடைய கல்வி சுகாதார நலன் தொடர்பாகவூம் ஆராய்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றௌடு மட்டுமன்றி மாணவர்களை பனையோலை இழைக்கச்செய்தல்இதையல்வேலை என்பவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தியதுடன் பொருட்காட்சிகளுக்கு மாணவர்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லுதல்இ நாடகம் நடித்தல். விளையாட்டுப்போட்டிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்தி மாணவர்களை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்ற காரண கர்த்தாவாக இருந்துள்ளார்.
இந்த வகையில் முன் பள்ளிக்கும் வளர்ந்தோர் கல்விக்கும் மொத்தமாக 92 பேர் சேர்ந்து இருந்ததாகவூம் அதில் 28 பேர் முன் பள்ளி மாணவர்களாகவூம் ஏனையோர் வளந்தோர் கல்வி பெறுகின்றவர்களாகவூம் காணப்பட்டனர்.இவற்றௌடு வளர்ந்தோர் கல்விக்கு முறைப்படி வயது எல்லைப்படி மாணவர்களைச் சேர்க்கின்ற நிலைமை காணப்பட்டு உள்ளமையினையூம் இக்கல்வியினை தரம் 2 இல் ஆரம்பிக்கின்ற நிலைமை காணப்பட்டது எனலாம்.

No comments:

Post a Comment